என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொண்டாமுத்தூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளை நுரையுடன் காற்றில் பறக்கும் சாயக்கழிவுகள்
- சாயக்கழிவுகள் உடலில் படுவதால் அரிப்பு ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
- கடந்த 3 மாதங்களாக இந்த கால்வாயில் சாயக்கழிவு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
வடவள்ளி
கோவை தொண்டாமுத்தூர் சாலையில் நாகராஜபுரம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
மேலும் இந்த பகுதியானது பேரூர் செல்லும் பிரிவில் உள்ளது. இதனால் நாகராஜபுரம் அருகே உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களும், நாகராஜபுரத்தில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு பஸ் ஏற வருவார்கள். இந்த பகுதியில் கிருஷ்ணா–ம்பதி குளத்திற்கு செல்லும் ஒரு கால்வாய் உள்ளது. சத்யா காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரும் இந்த கால்வாயில் கலந்து வீரகேரளம் வழியாக குளத்தில் சென்று கலக்கிறது. மேலும் சாயக்கழிவு நீரும் பல ஆண்டுகளாக இந்த கால்வாய் வழியாக சென்று குளத்தில் கலக்கிறது.
கடந்த 3 மாதங்களாக இந்த கால்வாயில் சாயக்கழிவு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நுரையுடன் வரும் சாயக்கழிவு நீர் காற்றில் பறந்து நாகராஜபுரம் பகுதியில் பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. அப்படி விழும் நுரையினால் தொற்று நோய் பரவுவதுடன், நுரை பட்டவர்களுக்கு அரிப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டு–கின்றனர். இதுகுறித்து அப்ப–குதி பொதுமக்கள் கூறிய–தாவது:-
இந்த பகுதியில் உள்ள கால்வாயில் பல ஆண்டுகளாகவே சாயக்கழிவுநீர் வெளியேறி வருகிறது. முதலில் குறைவான அளவிலேயே இருந்தது. இருப்பினும் இதனை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. தற்போது இந்த கால்வாயில், சாயக்கழிவுநீர் வரத்து அதிகமாக உள்ளது. வெள்ளை நுரையுடன் அதிகளவு வரும் சாயக்கழிவு நீர் காற்றில் பறந்து அருகே உள்ள குடியிருப்பு மற்றும் பஸ் நிறுத்த பகுதிகளில் வந்து விழுகிறது.
அப்போது வீட்டில் இருக்கும் மக்கள், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மீது படுகிறது. இதனால் அவர்களுக்கு ஒரு சில நாட்களில் ஒரு வித அரிப்பு ஏற்படுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் அந்த பகுதியில் உள்ளது. இதுகுறித்து பல முறை நாங்கள் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் இங்கிருந்து செல்லும் சாயக்கழிவு குளத்தில் கலக்கிறது. இதனால் குளத்தில் உள்ள உயிரினங்கள் இறந்து விடுகின்றன. குளத்தின் வளமும் பாதிக்கப்படுகிறது.
மேலும் இங்கு யார் சாயப்பட்டறை நடத்துகிறார்கள் என்பதும் தெரியவில்லை. எனவே அதிகாரிகள் இங்கு சாய பட்டறை நடத்துவது யார்? அனுமதியுடன் தான் நடத்துகிறார்களா? இல்லையா? என்பதையும் பார்க்க வேண்டும். மேலும் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாயில் சாயக்கழிவு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்