search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாய்ந்த நிலை மின்கம்பங்களை மாற்ற வேண்டும்
    X

    மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.

    சாய்ந்த நிலை மின்கம்பங்களை மாற்ற வேண்டும்

    • சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மின் மோட்டார்கள் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்த்து விவசாயம் செய்து வருகின்றனர்.
    • சாலையில் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்லும் இடத்தில் மின் கம்பிகளுக்கு பதிலாக மின் வயர்களில் இணைப்பு கொடுத்துள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி சேகல் கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மின் மோட்டார்கள் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்த்து விவசாயம் செய்து வருகின்றனர்.

    திருமருகல் துணை மின் நிலையத்திலிருந்து சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு சேகல்- நாட்டார்மங்கலம் சாலையில் உள்ள மின் மோட்டார்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.

    அவ்வாறு மின்விநியோகம் செய்யப்படும் சேகல் சாலையில் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்லும் இடத்தில் மின் கம்பிகளுக்கு பதிலாக மின் வயர்களில் இணைப்பு கொடுத்துள்ளது.

    காற்று வேகமாக வீசும் நேரங்களில் இந்த வயர்கள் அறுந்து சாலையில் விழுந்து விபத்துக்களை ஏற்படுத்துகிறது.

    மேலும் வயல்வெளிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் சேதமடைந்தும்,

    சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும்,சாய்ந்த நிலையிலும் காணப்படுகிறது.

    இதனால் விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே விவசாயிகளின் சிரமத்தை உணர்ந்து அதிகாரிகள் உடன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

    Next Story
    ×