என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை பொருநை அருங்காட்சியக பணிகளை சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு ஆய்வு
- தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு இன்று நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய வந்தனர்.
- முதலில் முருகன்குறிச்சி பகுதியில் உள்ள பாளையங்கால்வாய் பகுதிக்கு சென்று அதனை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
நெல்லை:
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு இன்று நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய வந்தனர்.
பாளையங்கால்வாய்
குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையில் கலெக்டர் கார்த்திகேயன், சட்டப்பேரவை செய லாளர் சீனிவாசன், உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் ரூபிமனோகரன், அண்ணாத்துரை, அருள், மோகன், ராமலிங்கம், விஸ்வநாதன், ஜெயக்குமார் மற்றும் நெல்லை மாநக ராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தனர்.
முதலில் முருகன்குறிச்சி பகுதியில் உள்ள பாளை யங்கால்வாய் பகுதிக்கு சென்று அதனை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மேலப்பாளை யம் பகுதியை சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள், சட்டமன்ற உறுதிமொழி குழுவின் தலைவர் வேல்முருகனிடம் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது:-
தாமிரபரணியின் கிளை ஆறாக ஓடக்கூடிய பாளயங்கால்வாய் சுமார் 42 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த கால்வாயானது நெல்லை மாவட்டம் பழவூர் கிரா மத்தில் தொடங்கி 14 கிலோ மீட்டர் பயணத்திற்கு பின்னர் மாநகர பகுதியான மேலப்பா ளையத்தை வந்தடைகிறது.
சுமார் 800 ஆண்டுகள் பழமையான பெரிய பள்ளிவாசல் இந்த கரையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மாநக ரத்தின் 10 ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்கும், 57 குளங்களுக்கு நீர் ஆதாரமாகவும், கால்நடை களுக்கான முக்கியமான நீர் நிலை யாகவும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் பாளை யங்கால்வாய் திகழ்ந்து வருகிறது.
இத்தகைய முக்கி யத்துவம் வாய்ந்த பாளை யங்கால்வாயை நெல்லை மாநகராட்சி மேலப்பா ளையம் மண்டலத்தில் பயணிக்கும் போது மாநகராட்சி கழிவு நீரோடையும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு களும் நேரடியாக கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நச்சுகேடாக உள்ளது. எனவே இந்த பாளையங்கால்வாயை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட வேல்முருகன் எம்.எல்.ஏ., பாளையங்கால் வாயை முழுவது மாக தூர்வார கூடுதல் நிதி ஒது க்கீடு செய்யவும், அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் கால்வாயில் கழிவு நீர் கலப்பதை முழுதும் தடுக்கும் முறை குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு உறுதியாக இருப்பதாக குழு தலைவர் வேல்முருகன் மனு அளித்தவர்களிடம் வலியுறுத்தினார்.
பொருநை அருங்காட்சியகம்
தொடர்ந்து சீவலப்பேரி சாலையில் அமைந்துள்ள விளையாட்டு கிராமத்தை பார்வையிட்ட உறுதிமொழி குழுவினர், ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் ரூ.33 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகத்தையும் ஆய்வு செய்தனர்.
இதனை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் நாங்குநேரியில் உள்ள தொழில் பூங்கா, அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே உள்ள ஆவின் பால் பண்ணை, சந்திப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ்நிலைய கட்டுமானப் பணிகள், சுத்தமல்லி யில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக் கழகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகள், பேட்டை கண்டியப்பேரியில் அரசு மருத்துவமனை கட்டிட பணிகளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
தொடர்ந்து இன்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நடை பெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்