என் மலர்
உள்ளூர் செய்திகள்
சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட மாணவர்களின் வீட்டுக்கு கடிதம்- பேரூராட்சி செயல் அலுவலருக்கு குவியும் பாராட்டுகள்
- ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஒரு வாரகாலம் கொடியேற்றி நாட்டுப் பற்றை பறைசாற்ற வேண்டும்.
- வருவாய் ஈட்டாத பெற்றோரின் குழந்தைகளுக்கு சொந்த பொறுப்பில் தேசியக் கொடி அனுப்பி வைக்கப்படும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம்தாலுகா தலைஞாயிறு பேருராட்சியில் நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக கொண்டாட மாணவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் கடிதம் எழுதி அழைப்பு விடுத்து வருகிறார்.அந்த கடிதத்தில், மத்திய அரசின் முடிவு படி நாடு முழுவதும் 11.8.2022 முதல் 17.8.2022 முடிய ஒரு வார காலம் சுதந்திர வாரமாக கொண்டாடப்பட உள்ளது. அப்போது அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என இந்திய அரசால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நம் தேசியக் கொடி நம் உயிரில், உணர்வில் கலந்த பெருமை என்று குறிப்பிட்டு வீடு தோறும் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஒரு வார காலம் கொடியேற்றி நாட்டுப் பற்றை பறைசாற்றக் வேண்டும். தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனை செய்யப் பட உள்ளது. பெற்றோர் மூலம் வாங்கி கொள்ளலாம். பெற்றோர் இல்லாத குழந்தைகள் மற்றும் வருவாய்ஈட்டாத பெற்றோரின் குழந்தை களுக்கு சொந்த பொறுப்பில் தேசியக் கொடி அனுப்பி வைக்கப்படும்.
அனைத்து வீடுகளிலிலும் தேசியக் கொடி என்னும் இலக்கை எட்ட மாணவர்கள் பங்களிப்பால் மட்டுமே இயலும்.
அஞ்சல் துறைக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தவும் தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு அஞ்சல் கடிதம் எழுதி வருகிறேன். மாணவர்களுக்கு தேச பற்ற ஊக்குவிக்கும் விதமாக சுமார் 5000 ஆயிரம் கடிதம் எழுதி அனுப்ப உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலரின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிகிறது.