என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அடுத்த மாதம் 2 திருவிழாக்கள்
- திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அடுத்த மாதம் 2 திருவிழாக்கள் தொங்குகிறது.
- ஒரே நாளில் 2 திருவிழாக்களின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெரு மானின் அறுபடை வீடு களில் முதல் படை வீடு என பெருமை பெற்றது. இங்கு கந்த சஷ்டி விழாவும், கார்த்திகை தீபத் திருவிழா வும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு 2 திருவிழாக்களும் அடுத்த மாதத்தில் வருகின்றன.
கந்தசஷ்டி விழா வருகிற 13-ந் தேதி காப்புகட்டு தலுடன் தொடங்குகிறது. விழாவினை முன்னிட்டு மதுரை, மதுரையை சுற்றியுள்ள பகுதிகள், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்க ளைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக் கணக்கானோர் திருப்ப ரங்குன்றம் கோவிலில் தங்கி இருந்து கந்த சஷ்டி விரதம் அனுசரிப்பார்கள்.
விழா நாளன்று சண்முகர் சன்னதியில் சண்முகர்-வள்ளி தெய்வானைக்கு காலை யிலும், மாலையிலும் சண்முக அர்ச்சனை நடைபெறும். தொடர்ந்து சண்முகர் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 17-ந் தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 18-ந் தேதி திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்கார லீலை நடைபெறும். 19-ந் தேதி காலையில் கந்த சஷ்டி தேரோட்டம் நடைபெறும். மாலையில் பாவாடை தரிசனம் நடைபெறும்.
திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்கச் சப்ரத்திலும், மாலையில் வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 25-ந் தேதி பட்டாபிஷேகம் நடை பெறும். இதில் சுப்ரமணிய சுவாமிக்கு கிரீடம் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி சிறப்பு பூஜை நடைபெறும். தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக 26-ந் தேதி காலையில் கார்த்திகை தேரோட்டம் நடைபெறும்.
இதில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் வலம் வந்து சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மாலை 6 மணி அளவில் திருப்பரங்குன்றம் மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து 27-ந் தேதி தீர்த்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலை மையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா 13-ந் தேதி தொடங்க உள்ள நிலையில் 18-ந் தேதி கந்தசஷ்டி விழாவின் சூரசம்காரம் லீலை நடைபெறுகிறது. அன்றைய தினம் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற உள்ளது. ஒரே நாளில் 2 திருவிழாக்களின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம் கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடைதிறப்பு நேரம் மாற்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று மாலை 7 மணிக்கு நடை சாத்தப்படு கிறது.
இதுகுறித்து திருப்பரங் குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுவது வழக்கம். இன்றைய தினம் நள்ளிரவு 1.05 முதல் 2.23 வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பரங்குன்றம் கோவில் நடையானது இரவு 7 மணிக்கே சாத்தப்படுகிறது. மீண்டும் வழக்கம்போல் நாளை காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்