search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தட்டி கேட்ட பெண்ணை தாக்கிய சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது
    X

    தட்டி கேட்ட பெண்ணை தாக்கிய சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது

    • தட்டி கேட்ட பெண்ணை தாக்கிய சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் சுகன்யா புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் மகாலட்சுமி கோவில் 4-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் புவனேஷ் குமார். இவரது மனைவி சுகன்யா (வயது23). இவர்கள் முதல் மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

    பக்கத்து வீட்டில் வசிப்பவர் யோகேசுவரன் என்ற நாகரத்தினம். இவ ரும், நண்பர்களும் சேர்ந்து வீட்டின் மொட்டை மாடி யில் மது அருந்தினர். போதை அதிகமான நிலையில் சுகன்யா வீட்டின் மாடியில் வைக்கப் பட்டிருந்த டிஸ் ஆண்ட னாவை உடைத்து கூச்சலிட்டுள்ளனர்.

    இதை சுகன்யா தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 7 அவர்கள் சுகன்யாவை ஆபாசமாக பேசி தாக்கினர்.

    இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் சுகன்யா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர்கள் டிஸ் ஆண்டனாவை உடைத்து சுகன்யாவை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து யோகேசுவரன் என்ற நாகரத்தினம், ஹரி கிருஷ்ணன்(19), தினேஷ் குமார்(22), ரியாஸ் அகமது (18), முகமது பரீத் (18) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 7 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×