search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுதல் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை வேண்டும்
    X

    வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    கூடுதல் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை வேண்டும்

    • வாடிப்பட்டி பகுதிக்கு கூடுதல் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • வாடிப்பட்டி பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமை யிடத்து துணை தாசில்தார் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி, பேரூராட்சிஅலுவலர்கள், வனத்துறை, மின்சார துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, தீயணைப்பு த்துறை உள்ளிட்ட அரசு துறையைச் சே ர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் சோழவந்தான் வடகரை கம்மாய்பகுதியில்உள்ள சீமை கருவேலங்காட்டுக்குள் காட்டு பன்றிகள் அதிகம் இருப்பதால் விவசாய விளைப்பொருட்களை சேதப்படுத்துகிறது என்றும், அவற்றை முறையாக பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்றும், மதுரையில் இருந்து வாடிப்பட்டிக்கு மெட்ரோ ரெயில் இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    மேலும் கிராம பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்றும், நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், வாடிப்பட்டி பேரூராட்சியில் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் விதமாக சுற்றி திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என்றும், கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும்,

    வாடிப்பட்டி பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாடிப்பட்டி பகுதியில்முன்பு இருந்தது போல் கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும்விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    முடிவில் தென்னை விவசாயசங்கத் தலைவர் சீதாராமன் நன்றி கூறினார்.

    Next Story
    ×