என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அனைத்து வார்டுகளிலும் அ.தி.மு.க. கொடியேற்று நிகழ்ச்சி
- அனைத்து வார்டுகளிலும் அ.தி.மு.க. கொடியேற்று நிகழ்ச்சி நடக்கிறது.
- அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மதுரை
அ.தி.மு.க.வின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள 16 கால் மண்டபம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ படத்திற்கு நாளை காலை 10 மணியளவில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட உள்ளது.
அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கொடி கம்பம் கொடியேற்று நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதே போல மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம், கிழக்கு தொகுதி, மேலூர் தொகுதி அனைத்து கழகங்க ளிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வார்டு பகுதிகளிலும் அ.தி.மு.க.வின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது,
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெய லலிதா பேரவை, இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, வர்த்தக அணி, மீனவர் அணி, விவசாய பிரிவு, வழக்கறிஞர் பிரிவு, அண்ணா தொழிற்சங்கம், சாரா ஓட்டுனர் அணி, சிறுபான்மை பிரிவு, மருத்துவ அணி, கலைப்பிரிவு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் முன்னாள் இந்நாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.