search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மு.க.ஸ்டாலின் மறைக்கிறார்-ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
    X

    அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மு.க.ஸ்டாலின் மறைக்கிறார்-ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

    • அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மு.க.ஸ்டாலின் மறைக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
    • எம்.ஜிஆர்.-ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படம் பொறிக்கப்பட்ட புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மேற்கு (தெற்கு), அலங்காநல்லூர், வாடிப்பட்டி வடக்கு, வாடிப்பட்டி தெற்கு ஆகிய ஒன்றியங்களில் அ.தி.மு.க. எம்.ஜிஆர்.-ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படம் பொறிக்கப்பட்ட புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வாடிப்பட்டி ஒன்றியத்திற்கு ஒன்றிய செயலாளர் காளிதாசிடம் உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

    இதேபோல் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கொரியர் கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடமும் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது.

    பின்னர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    இன்றைக்கு சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.திருச்சியில் அமைச்சர் நேருவின் ஆதரவாளருக்கும், நாடாளு மன்ற உறுப்பினர் சிவாவின் ஆதரவா ளர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் காவல் நிலையத்தில் சண்டையிட்டு பெண் காவலர் காயமடைந்தார்.காவல் துறை வைத்திருக்கும் முதல்-அமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

    கொரோனா கால கட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வேலைவாய்ப்பு, கல்வி, வர்த்தகம் போன்ற வற்றில் ஆன்லைன் வர்த்த கத்தை செயல்படுத்தினார். அது மட்டுமல்ல அ.தி.மு.க. 51 ஆண்டுகால வரலாற்றில் 31 ஆண்டுகள் கால ஆட்சியில் தான், தகவல் ெதாழில்நுட்ப கட்டமைப் பில் 100 சதவீதம உள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் உருவாக்கப்ப ட்டது. அந்த சாதனைகளை எல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைத்து விட்டார்.

    அது மட்டுமல்ல இன்றைக்கு தகவல் தொழில் நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திட 2011-ம் ஆண்டு மடிக்கணி திட்டத்தை திட்டத்தை ஜெயலலிதா உருவாக்கினார்.அதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 52 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப் பட்டது. ஆனால் தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி கால நலத்திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு விட்டது.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு முதல் கையெழுத்து போடுவோம் என்று சொன்னார்கள். ஆனால் சொன்னபடி நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், ஏ.கே.பி. சுப்பிரமணியம், தனராஜன், திருப்பதி, முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, பேரூர் செயலாளர் அசோக்குமார், கோட்டைமேடு பாலன், பால்பண்ணை தலைவர் பொன்ராம், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

    Next Story
    ×