என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
அழகப்பன் நகர் ரெயில்வே கேட் இன்று முதல் மூடப்பட்டது
Byமாலை மலர்15 Dec 2022 2:02 PM IST
- மதுரை அழகப்பன் நகர் ரெயில்வே கேட் இன்று முதல் மூடப்பட்டது.
- இரட்டை ரெயில் பாதை திட்டத்தில் மதுரை-திருமங்கலம் இடையே தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மதுரை
மதுரை-தூத்துக்குடி இரட்டை ரெயில் பாதை திட்டத்தில் தற்போது மதுரை-திருமங்கலம் இடையே தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பழங்காநத்தம் - பசுமலையை இணைக்கும் அழகப்பன் நகர் ரெயில்வே கேட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்து தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடக்கிறது.
எனவே அழகப்பன் நகர் ரெயில்வே கேட் இன்று (15-ந் தேதி) முதல் வருகிற 18-ந் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
X