search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் கைவரிசை காட்டி ஏமாற்ற முயன்ற ஆந்திர வாலிபர்
    X

    மதுரையில் கைவரிசை காட்டி ஏமாற்ற முயன்ற ஆந்திர வாலிபர்

    • மதுரையில் கைவரிசை காட்டி ஏமாற்ற முயன்ற ஆந்திர வாலிபர் கைதானார்.
    • போலீசார் பரோடா சுதிரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பகுதியில் பிரபல 5ஸ்டார் ஓட்டல் உள்ளது. சம்பவத்தன்று இந்த ஓட்டலுக்கு 30 வயதுடைய நபர் டிப்டாப் உடையணிந்து வந்தார். அவர் தன்னை வியாபாரி என அறிமுகப்படுத்தி கொண்டதோடு தனக்கு ஆடம்பரமான அறை வாடகைக்கு வேணடும் என கூறியுள்ளார்.

    அதன்படி ஓட்டல் நிர்வாகம் அனைத்து வசதிகளுடன் கூடிய அறையை அந்த நபருக்கு ஒதுக்கியது. கடந்த சில நாட்கள் ஓட்டலில் தங்கிய அந்த வாலிபர் உணவு, மது என ஏக போக வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். ஓட்டல் அறையை விட்டு வெளியேறும் போது பில் தொகையை செலுத்துவதாகவும் ஓட்டல் நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.

    ஆனால் அந்த நபர் சம்பவத்தன்று இரவு யாருக்கும் தெரியாமல் அங்கிருந்த தப்ப முயன்றதாக தெரிகிறது. அப்போது நுழைய வாயிலில் இருந்த ஓட்டல் காவலாளி கையும் களவுமாக பிடித்தார். அவரிடம் ஓட்டலில் தங்கியதற்கான பணத்தை கேட்டபோது இல்லை என கூறியதோடு மோசடி பேர்வழி என தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்த பரோடா சுதிர் என தெரியவந்தது. இவர் வேலைக்கு செல்லாமல் ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பியுள்ளார்.

    இதற்காக ரெயில்களில் பயணம் செய்யும் இவர் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி, 3 ஸ்டார், 5 ஸ்டார் ஓட்டல்களில் தங்கி ஏக போக வசதியை அனுபவித்து அதற்கான தொகை செலுத்தாமல் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் பரோடா சுதிரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×