என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி](https://media.maalaimalar.com/h-upload/2023/07/11/1913454-avanicriph1.jpg)
கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி நடந்தது
- வெற்றி பெற்ற அணிக்கு கவுன்சிலர் காளிதாஸ் சுழற் கோப்பை வழங்கினார்.
மதுரை
மதுரை பாண்டி கோவில் அருகே சுற்றுச்சாலையில் உள்ள கலைஞர் திடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை மாவட்டத்தில் உள்ள 32 அணிகள் மோதின. இதில் முதல் பரிசினை மதுரை காமராஜர்புரம் ரேயான்சிசி அணி வெற்றி பெற்றது.
இந்த அணிக்கு கவுன்சிலர் காளிதாஸ் சுழல் கோப்பை மற்றும் ரொக்க பரிசினை வழங்கினார். இதனையடுத்து 2-வது பரிசாக மதுரை ஒத்தக்கடை ஸ்போர்ட்ஸ் வேர்டு அணியும், 3-வது பரிசினை ஏ.பி.டி. பாய்ஸ் அணியும், 4-வது பரிசினை மதுரை அரசரடி யு.சி.வார்யர்ஸ் அணி வென்றது. முன்னதாக போட்டியை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பாலா, உதயா, கார்த்திக், முத்துமணி, வழக்கறிஞர் மகேந்திரன், நாகேந்திரன், முகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.