search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை இடையபட்டியில்  விழிப்புணர்வு நடைபயணம்
    X

    இடையப்பட்டி வனப்பகுதியில் அமைச்சர்கள் மூர்த்தி, மதிவேந்தன் மற்றும் வனத்துறையினர் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.

    மதுரை இடையபட்டியில் விழிப்புணர்வு நடைபயணம்

    • விழிப்புணர்வு நடை பயணத்தை அமைச்சர்கள் மூர்த்தி, மதிவேந்தன் தொடங்கி வைத்தனர்.
    • அரிய வகை உயிரினங்கள் இந்த பகுதியில் உள்ளன.

    மதுரை

    மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் இடையபட்டி தெற்கு பகுதி அம்முர் உள்ளடக்கிய வெள்ளிமலை ஆண்டவர் கோவில் பகுதியில் சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளை முன்னிட்டு இயற்கை நடைபயணம் நடந்தது. இதனை அமைச்சர்கள் மூர்த்தி, மதிவேந்தன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    இந்த நடை பயணத்தில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், ஒன்றிய தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர் கலாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் நாளை (22-ந் தேதி) சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளாக கடைப்பிடிக் கப்படுகிறது. அதனை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை ஒவ்வொரு ஆண்டும் பல்லுயிர் வாழும் இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு இடைய பட்டியை தேர்வு செய்து இங்கு இந்த விழிப்புணர்வு பயணத்ைத நடத்துகிறோம். இது கடம்ப மரம் உள்ளிட்ட பல மரங்கள் கொண்ட சமவெளி காடு ஆகும்.

    இங்கே பல்லுயிர்கள் இருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த நடை பயணத்தை தொடங்கி உள்ளோம். இந்த பகுதியில் பல்வேறு மரங்கள், மூலிகை செடிகள் மற்றும் தேவாங்கு உள்ளிட்ட பல்லுயிர்கள் வாழுகின்ற இடமாக இருக்கிறது.

    தமிழ்நாட்டில் சமவெளி காட்டில் கடம்பவனம் என்பது குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் தான் இருக்கிறது. இங்கு கடம்ப மரம் மட்டுமின்றி உசிலை, குறுந்தம், நெய் குறுந்தம், பூவந்தி போன்ற மரங்களும் இருக்கிறது. இங்கு மருத்துவ குணம் கொண்ட காந்தன், விருது விராலி, மருள், சிறு குஞ்சன் போன்ற மூலிகை செடிகளும் உள்ளன.

    இது தவிர தேவாங்கு, முள் எலி, எறும்புத்தின்னி, புள்ளிமான், காட்டுப்பன்றி போன்ற அரிய வகை உயிரினங்களும் இந்த பகுதியில் உள்ளன.

    எனவே இந்த பகுதியை பாதுகாக்க வேண்டும். இதில் உள்ள முக்கியத்துவம் கருதி இங்குள்ள காட்டு பகுதிகள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும், இங்குள்ள நீர் நிலைகள், மரங்கள், பூச்சிகள் எல்லாமே நாம் வாழுகின்ற உலகத்தில் அனைத்து உயிர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×