என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரெயில்வே கிராசிங் பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்க கோரிக்கை
- 18 கிராமங்களில் உள்ள ரெயில்வே கிராசிங் பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பயணிக்க இயலாத வகையில் கரடுமுரடான சாலை உள்ளது.
மதுரை
மீட்டர் கேஜ் பாதையாக இருந்த மதுரை- போடி ரெயில் பாதை கடந்த சில வருடங்களுக்கு முன்பு அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி நடந்தது. பணியின் போது அப்பகுதியில் இருந்த ரெயில்வே கேட்களை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தெற்கு ரெயில்வே மூடியது.
இதை தொடர்ந்து மதுரை- போடி ரெயில்வே பாதைக்கு அருகே இருந்த பெரும்பாலான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ரெயில்வே கேட்டை கடக்க வழி இல்லாமல் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ரெயில்வே கிராசிங்கை கடக்கும் சூழல் உருவானது.
சில இடங்களில் ரெயில்வே நிர்வாகத்தால் 500மீட்டர் தூரம் வரை மட்டுமே சர்வீஸ் ரோடு போடப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் பொதுமக்கள் பயணிக்க இயலாத வகையில் கரடுமுரடான சாலை உள்ளது.
மேலும் புளியங்குளம் ஒத்தவீடு- கிண்ணிமங்கலம், மீனாட்சிபட்டி, தென்பழஞ்சி, மணப்பட்டி, வெள்ளப்பாரைபட்டி, சின்னசாக்கிலிபட்டி, அய்யனார்குளம், மீனாட்சி காலனி, கரடிப்பட்டி, ஆலம்பட்டி, கீழப்புதூர் க.புதூர் முத்துப்பட்டி, நாகமலைபுதூர், அடைக்கம்பட்டி, ஓந்திமலை, டீச்சர்ஸ் காலனி போன்ற 18 கிராம மக்கள் மதுரை- போடி ரெயில்வே லைனை கடந்து, மதுரை - தேனி மெயின் ரோட்டுக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது.
இது குறித்து மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், ரெயில்வே கோட்ட மேலாளர் ஆகியோரிடம் மதுரை - போடி ரெயில்வே லைனில் உள்ள சர்வீஸ் ரோடுகளை நாகமலை புதுக்கோட்டையில் இருந்து செக்கானூரணி வரை தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தார்.