என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அரசு ஊழியர்கள் கருப்புச்சட்டை அணிந்து போராட்டம் அரசு ஊழியர்கள் கருப்புச்சட்டை அணிந்து போராட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/24/1796737-1.jpg)
கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்.
அரசு ஊழியர்கள் கருப்புச்சட்டை அணிந்து போராட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அரசு ஊழியர்கள் கருப்புச்சட்டை அணிந்து நூதன போராட்டம் நடத்தினர்.
- தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை, நவ.24-
தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். "ஒப்படைப்பு விடுப்பை ரத்து செய்ய கூடாது, கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட்ட 4 சதவீத அகவிலைபடி உயர்வை உடனே வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) கருப்பு சட்டை அணிந்து அலுவலகத்துக்கு வந்திருந்தனர். இதனால் அரசு அலுவலகங்கள் கருப்புச் சட்டை மயமாக காட்சி அளித்தது.
இதுகுறித்து மதுரை மாவட்ட அரசு ஊழியர்கள் சங்க தலைவர் நடராஜன் கூறுகையில், "ஒப்படைப்பு விடுப்பு ரத்து, அகவிலைப்படியை காலம் தாழ்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் மட்டும் கருப்பு சட்டை அணிந்து வேலை பார்த்தனர். மாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.