search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு அரசு வேலை, ரூ.50 லட்சம் நிதி வழங்க கோரிக்கை
    X

    பலியான சிறுவனின் குடும்பத்தினருடன் தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் மனு கொடுக்க வந்திருந்தார்.

    இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு அரசு வேலை, ரூ.50 லட்சம் நிதி வழங்க கோரிக்கை

    • மதுரை சித்திரை திருவிழாவின்போது இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு அரசு வேலை, ரூ.50 லட்சம் நிதி வழங்க கோரி கலெக்டரிடம் திருமாறன் மனு அளித்தார்.
    • சிறுவன் பிரேம்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

    மதுரை

    மதுரையில் நடந்த சித்திரை திருவிழாவின் போது திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஜெயக்குமார்-பேச்சியம்மாள் தம்பதியரின் மகன் பிரேம்குமார் (வயது 10) ஆற்றில் மூழ்கி பரிதாப மாக உயிரிழந்தான். அவனது குடும்பத்தினர் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்களுடன் தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறனும் உடன் வந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நேரத்தில் 5 லட்சத்திற்கு மேலான பக்தர்கள் கூடுவது வழக்கம். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதால் கடந்த 3-ந் தேதி வைகை ஆற்றில் உள்ள ஆகாய தாமரை செடிகளை உடனே அகற்ற வேண்டும் என்று கலெக்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரி களிடம் கோரிக்கை விடுத்ேதன்.

    ஆனால் மாவட்ட நிர்வாகம் இதை அலட்சியப் பப்படுத்தியதன் காரணமாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது சிறுவன் பிரேம்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தான். மேலும் பிரேம்குமாரின் தந்தை, தாயை விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் தினேஷ், பிரேம் குமார் ஆகிய 2 மகன்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்துக் கொண்டிருந்த நிலையில் பிரேம்குமாரின் இறப்பு அந்த குடும்பத்துக்கு பெரிய இழப்பாக உள்ளது.

    எனவே தமிழக அரசு இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×