என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா](https://media.maalaimalar.com/h-upload/2023/04/19/1868191-tmangalamcollg.webp)
அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
- 537 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
திருமங்கலம்
திருமங்கலம் காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு அரசு கலைக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. கல்லூரி முதல்வர் லட்சுமி வரவேற்றார். விருது நகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட துறை களை சேர்ந்த 537 மாணவ, மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கினார்.அப்போது அவர் பேசு கையில், பட்டம் பெற்றதன் மூலம் அறிவை மேம்படுத்திக் கொண்டு நாட்டிற்கு மாணவ, மாணவிகள் தங்களுடைய செயல்பாடு களை அளிக்க வேண்டும் என்றார்.
பட்டமளிப்பு விழாவில் முன்னாள் முதல்வர் புவனேஸ்வரன், காங்கிரஸ் நிர்வாகி உலகநாதன், வட்டார தலைவர் முருகேசன், கவுன்சிலர் அமுதா சரவணன், நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், நகரச் செய லாளர் ஸ்ரீதர் துணைத் தலைவர் ஆதவன் அதியமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.