என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாவோயிஸ்டுகளுக்கு பயிற்சியளித்த வாலிபரிடம் விசாரணை
- மாவோயிஸ்டுகளுக்கு பயிற்சியளித்த வாலிபரிடம் மதுரையில் விசாரணை நடத்தப்பட்டது.
- பல தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
மதுரை
விருதுநகர் அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது26). இவர் கேரள மாநிலத்தில் மாவோஸ்டுகளுடன் சேர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தேசிய குற்றப்பிரிவு போலீசார் அவரை தேடி வந்தனர்.
விசாரணையில் அவர் ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் பகுதியில் மனைவியுடன் வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. இதுபற்றி மதுரை கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் கீழராஜகுலராமன் பகுதி யில் பதுங்கியிருந்த அய்யப்பனை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
விருதுநகரில் இருந்து அய்யப்பன் மதுரை இடையப்பட்டியில் உள்ள இந்தோ- திபெத் பாதுகாப்பு படை முகாமுக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
பின்பு அய்யப்பனை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆவணங்களை சேகரித்தனர். அதன் பிறகு அவரை டெல்லிக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக மதுரை போலீஸ் வட்டாரத்தில் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் பிடிபட்ட அய்யப்பன் மாவோயிஸ்ட் தீவிரவாதியாக செயல்பட்டுள்ளார். அவர் கேரள மாநிலம் மலப்புழா மாவட்டத்தில் உள்ள நிலாம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கம் தொடங்கிய நாளை முன்னிட்டு ஆயுதப் பயிற்சி, கொடி ஏற்றுதல் மற்றும் வகுப்புகள் எடுத்தல் உள்பட பல்வேறு செயல்களில் ரகசியமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
அவருக்கு பல தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விருதுநகர் மாவட்டத்தில் ஒருவாரம் தங்கி இருந்து ரகசிய விசாரணை நடத்தி னார்கள். அப்போது நிலாம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கப் பணிகளில் அய்யப்பன் தீவிரமாக ஈடுபட்டது தம்ம நாயக்கன்பட்டி அய்யப்பன் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை போலீசார், தீவிரவாத அமைப்புக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டதாக, அய்யப்பனை கைது செய்து உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்