என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்ற தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி தோல்வியா?-முன்னாள் அமைச்சர் கேள்வி
- மதுரைபுறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
- 5ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்பு என்று சொன்னார்களே அதுவும் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் பேசினார்.
மதுரை
மதுரைபுறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் பொதும்பு, அதலை, அரியூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு கூட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆர்.பி. உதயகுமார் பேசிய தாவது-
காவிரி டெல்டா பகுதியில் 3 லட்சம் பயிர்கள் கருகி வருகிறது. காவிரி ஒழுங்காற்று ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. உச்சநீதி மன்றமும் தண்ணீரை விட வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அரசு இதை மதிக்காமல் தண்ணீர் தர மறுக்கிறது. இதனால் பயிர்கள் கருகி வேதனையில் விவசாயி இறந்த கொடுமை நடந்து வருகிறது.
உலகம் பற்றி பேசும் உதயநிதி தற்போது மாநில அரசு உரிமையை மீட்க குரல் கூட எழுப்பவில்லை. இன்றைக்கு தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை குழி தோண்டி புதைக்கும் அரசாக தி.மு.க அரசு உள்ளது. தமிழ்நாட்டி னுடைய இளைய தலை முறையின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடுமோ என்கிற மிகப்பெரிய அச்சம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.
2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அளவில் 2026-ம் வரை 50 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தீவிர முயற்சி எடுக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி 185-இல் கூறப்பட்டுள்ளது.அதே போல் அரசு துறைகளில் 5.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக் கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண்கள் 187, 188, 189 கூறப்பட்டுள்ளது
தற்போது முதல்-அமைச்சர் கடந்த 2ஆண்டு காலத்திலே 12 ஆயிரத்து 577 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 17 ஆயிரம் பேருக்கும், அடுத்த 2 ஆண்டுகளிலே 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும் என்று 10,205 பேருக்கு அரசாணை வழங்கிய நிகழ்ச்சியில் பேசினார். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் 5 ஆண்டு களில் 5 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவோம் என்ற தி.மு.க. தேர்தல் வாக்குறு தியை ஒப்பிட்டு பார்க்கும் போது இது தோல்வி அடைந்து இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வீதம் 5ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்பு என்று சொன்னார்களே அதுவும் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது.
இளைஞர் அணி மாநாடு நடத்த போகிறோம் என்று சொல்லி உதயநிதி ஸ்டாலின் ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளார்.
இந்த மாநாட்டில் இளைஞர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு என உத்தரவாதம் தரப் ்போகிறார்கள்? இளைஞர்களுக்கு கேள்விக் குறியாக இருக்கும் வேலைவாய்ப்பில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றும் வகையில், வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு அதில் இடம்பெறுமா? அறிவிப்பு அளிக்க உதயநிதி ஸ்டாலின் முன் வருவாரா?.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்