என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு முகாம்

- மேலூர் அருகே வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
- 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் 402-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
மேலூர்
மேலூர் அருகே உள்ள வண்ணாம்பாறை பட்டியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மேலூர், கொட்டாம்பட்டி வட்டாரங்கள் இணைந்து நடத்திய வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அங்குள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காளிதாசன் முகாமை தொடங்கி வைத்து தேர்வு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மாவட்ட செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டார். மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் சின்னத்துரை வரவேற்புரை ஆற்றினார். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் 402-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர். மேலூர் வட்டார இயக்க மேலாளர் ராமு நன்றி கூறினார். மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி வட்டார ஒருங்கிணைப் பாளர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் சமுதாய பணியாளர்களும் கலந்து கொண்டனர்.