என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜவுளி, இனிப்பு, பட்டாசு கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை
- ஜவுளி, இனிப்பு, பட்டாசு கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், 2-வது குற்றத்திற்கு நீதிமன்றம் வாயிலாக அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.
மதுரை
சென்னை முதன்மை செயலாளர் / தொழிலாளர் ஆனையர் அதுல் ஆனந்த் அறிவுரையின்படியும், சென்னை சட்டமுறை எடையளவுக் கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி உத்தரவின்ப டியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டுதலின்படியும் மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வர்களால் சட்டமுறை எடையளவுச் சட்டம், எடையளவுகள் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் திடீர் சோதனை நடத்தினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைக் கடைகள், இனிப்புக் கடைகள், மற்றும் நிறுவனங்கள், பட்டாசுக் கடைகளில் இந்த சோதனை நடந்தது.
இதில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் 26 நிறுவனங்களிலும், சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் 15 நிறுவனங்க ளிலும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சம்பந்த ப்பட்ட நிறுவனங்களின்மீது நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.
மேலும் பொட்டலப் பொருட்கள் விதிகளின்கீழ் உரிய காணப்படாத 9 பட்டாகக் கடைகளில் முரண்பாடு கண்டறியப்பட்டு அந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2011-ம் வருட சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின்கீழ் பொட்டலப் பொருட்களின் விவரங்களை குறிப்பிடாமல் விற்பனை செய்து வரும் சில்லரை மற்றும் மொத்த விற்பனை வணிக நிறுவனங்களின் மீது முதலாவதாக கண்டறியப்படும் முரண்பாட்டிற்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும், 2-வது முறையாக கண்டறியப்படும் முரண்பாட்டிற்கு நீதிமன்ற நடவடிக்கை தொடரவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.
தராசுகள் மற்றும் எடையளவுகளை பரிசீலனை செய்து முத்திரை ஆய்வர்களிடம் உரிய காலத்தின் முத்திரையிட்ட பின்பே வியாபாரத்திற்கு பயன்படுத்தவேண்டும்.
முத்திரையில்லாமல் எடையளவுகள் பயன்படுத்துபவர்களுக்கு முதல்முறையாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், 2-வது குற்றத்திற்கு நீதிமன்றம் வாயிலாக அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.
மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்