என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுரை- சென்னை தேஜஸ் ரெயில் திண்டுக்கல்லில் இருந்து இயக்க கோரிக்கை
- மதுரை- சென்னை தேஜஸ் ரெயிலை திண்டுக்கல்லில் இருந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தேஜஸ் ரெயில் நேற்று முதல் திருச்சியில் இருந்து புறப்பட்டு செல்கிறது.
மதுரை
மதுரை- விருதுநகர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடந்து வருகிறது. அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று முதல் திருச்சியில் இருந்து புறப்பட்டு செல்கிறது. இதனால் மதுரையில் இருந்து செல்லும் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மதுரையில் இருந்து வருகிற 19, 21, 26, 28-ந் தேதிகளில் புறப்படும் டெல்லி நிஜாமுதீன் சம்பர்கிரந்தி விரைவு ரெயில் (12651) மற்றும் பிப்ரவரி 14, 16, 21, 23-ந் தேதிகளில் டெல்லியில் இருந்து புறப்படும் மதுரை சம்பர்கிரந்தி விரைவு ரெயில் (12652) ஆகியவை விழுப்புரம் வரை இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக அந்த ரெயில்கள் திண்டுக்கல் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல மதுரை-சென்னை இடையேயான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் திண்டுக்கல்லில் இருந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.