search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏழை மக்களை பாதிக்கும் பால் விலை உயர்வு: ரத்து செய்ய தென்னிந்திய பார்வர்டு பிளாக் வலியுறுத்தல்
    X

    ஏழை மக்களை பாதிக்கும் பால் விலை உயர்வு: ரத்து செய்ய தென்னிந்திய பார்வர்டு பிளாக் வலியுறுத்தல்

    • ஏழை மக்களை பாதிக்கும் பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தென்னிந்திய பார்வர்டு பிளாக் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
    • இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி தமிழகம் தழுவிய அறப்போராட்டத்தை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி விரைவில் நடத்தும்.

    அவனியாபுரம்

    தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு ஆவின் பால் விலையை உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கிறது. இதனால் விலைவாசி உயர்வு ஏறும் நிலை ஏற்படுகிறது.

    ஏற்கனவே மின்சார கட்டண உயர்வு கடுமையாக பாதிக்கும் வேளையில் பால் விலை உயர்வும் மக்களை வறுமை சூழ்நிலைக்கு கொண்டு செல்லும். எனவே தமிழக அரசு உடனே போர்க்கால நடவடிக்கையாக பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

    தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையான குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. ஆயிரம் தருவதாக கூறி இன்று வரை அதை தராமல் குடும்பத் தலைவிகளை ஏமாற்றியதை கண்டித்தும், பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் என்று கூறி சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கையை குறைத்ததை கண்டித்தும், எளிய மக்களை பாதிக்கும் வகையில் வீட்டு வரி கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், பத்திரப்பதிவு துறையில் உள்ள முறைகேடுகளை களையவும், தற்போது நடைமுறையில் உள்ள பத்திரப்பதிவின் கடினமான முறையை மாற்றி ரியல் எஸ்டேட் தொழிலை நம்பி வாழும் 1 கோடி நடுநிலையாளர்களை வாழ்வை பயன்பெறும் வகையில் பத்திரப்பதிவில் உள்ள நடைமுறை சிக்கல்களை எளிமை யாக்க வேண்டும் என்று பத்திரப்பதிவு துறை அமைச்சரை வலியுறுத்துகிறோம்.

    அன்றாடும் சாமானிய மக்களை பாதிக்கும் போக்குவரத்து துறையின் அபராத கட்டண உயர்வால் இந்த சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் பல இடங்களில் பொது மக்களுக்கும், போக்கு வரத்து காவல்துறைக்கும் பிரச்சினை ஏற்பட்டு மக்கள் மற்றும் காவல் துறையில் இடையே முரண்பாடு ஏற்படுகிறது.

    இந்த முரண்பாடுகளை களைவதற்கு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி தமிழகம் தழுவிய அறப்போராட்டத்தை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி விரைவில் நடத்தும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×