என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மதுரை பொதுக்கூட்டத்திற்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது மதுரை பொதுக்கூட்டத்திற்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது](https://media.maalaimalar.com/h-upload/2023/08/03/1926270-avanibjp.webp)
பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி மாவட்டத்தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நடந்தது.
மதுரை பொதுக்கூட்டத்திற்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அண்ணாமலை நடைபயணத்துக்கு மதுரை பொதுக்கூட்டத்திற்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
- பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன்ஜி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது
மதுரை
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மதுரையில் வருகிற 5-ந்தேதி தொடங்கி 4 நாட்கள் நடை பயணம் செல்கிறார். இதையொட்டி 7-ந்தேதி மாலை பழங்கா நத்தம் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இதில் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகி றார். மத்திய இணை மந்திரி மன்சூக் மாண்டவியா, அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
இந்த பொதுக் கூட்டத்திற்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்டத்தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார் மாவட்ட மேற்பார்வை யாளர்கள் கார்த்திக் பிரபு, ராஜரத்தினம், விருந் தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், சதீஷ்குமார் சகாதேவன் முருகேஷ் பாண்டியன் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து நிருபர்க ளிடம் மகா சுசீந்திரன் கூறுகையில், மதுரை வரும் அண்ணாமலைக்கு 5-ந்தேதி ஜான்சிராணி பூங்காவில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன்ஜி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 7-ந்தேதி பழங்காநத்தத்தில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமா னோர் கலந்து கொள்வார் கள் என எதிர் பார்க்கிறோம் என்றார்.