என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டம்: மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
- முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டம் லோயர்கேம்ப் பகுதியில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.
- பணிகளை விரைவுப்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு முல்லை பெரியாறு, லோயர் கேம்ப் பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 1296 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டப் பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிர படுத்தப்பட்டு குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மதுரை நகர் பகுதி களிலும் அனைத்து வார்டு களிலும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் தேக்கம் பணிகள் முடிவடை ந்துள்ளன.
இந்த பணிகளை மாநக ராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவு படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இன்னும் ஒரு சில மாதங்களில் பணிகள் நிறைவு பெற்று மதுரை நகரின் அனைத்து பகுதிகளுக்கும் குழாய் மூலம் சப்ளை செய்ய தேவையான ஏற்பாடுகளை எடுத்து வருவதாக மாநக ராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.