என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா
- எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது.
- ஓய்வு பெற்ற மில் மேலாளர் பாண்டியராஜன் தொடங்கி வைத்து பேசினார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் ஜி.அய்யல்ராஜ் தலைமை வகித்தார். மன்ற நிர்வாகிகள் சக்திவேல், வேட்டையார், வள்ளி யப்பன், கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற பொரு ளாளர் அண்ணாமலை வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியை ஓய்வு பெற்ற மில் மேலாளர் பாண்டியராஜன் தொடங்கி வைத்து பேசினார். பாண்டியன் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர், டாக்டர் வ.சண்முகசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 800-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி பேசினார்.
இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் இந்திரா காந்தி, விஜயா, தென் மண்டல ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பி னர் சிவசுந்தரம், மன்னர் கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ரெங்கராஜ், ஹார்விபட்டி அரவிந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில் மன்ற செயற்குழு உறுப்பினர் கணேசன் நன்றி கூறினார்.






