என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி டெண்டர் எடுத்துள்ளார்-பசும்பொன் பாண்டியன் தாக்கு
- பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி டெண்டர் எடுத்துள்ளதாக பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார்.
- ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களின் துணையோடு மீண்டும் தர்ம யுத்தத்தை நடத்தி வருகிறார்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வக்கீல் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-
தி.மு.க.வுக்கு எதிராக எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கினார். இந்த இயக்கம் தமிழகத்தில் வலிவோடும், பொலிவோடும் ஜெயலலிதா காலம் வரை இருந்தது. இந்த இயக்கத்தில் தற்போது யார் தலைமை பொறுப்பை ஏற்பது என்பதில் ஓ. பன்னீர்செல்வத்திற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் உச்சகட்ட மோதல் வலுத்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களின் பலத்தோடு அரசியல் செய்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி அதிகார போதையில் அ.தி.மு.க.வை கைப்பற்ற துடிக்கிறார். தற்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை டெண்டர் எடுத்து எடப்பாடி பழனிசாமி மகுடம் சூட்டியுள்ளார்.அவரது இந்த அரசியல் வியூகம் மக்கள் மன்றத்தில் எடுபடப்போவதில்லை.
ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களின் துணையோடு மீண்டும் தர்ம யுத்தத்தை நடத்தி வருகிறார். அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள் கட்சி மோதல், சாதி ரீதியான மோதலாக உருவாகி விடக்கூடாது என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. தற்போது திராவிட இயக்கங்கள், பாரதிய ஜனதாவை வீழ்த்த ஒரே அணியில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.