search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு, பதவி உயர்வை  மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முன்வருவாரா?- முன்னாள் எம்.எல்.ஏ. கேள்வி
    X

    டாக்டர் சரவணன்

    மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு, பதவி உயர்வை மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முன்வருவாரா?- முன்னாள் எம்.எல்.ஏ. கேள்வி

    • மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு, பதவி உயர்வை மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முன்வருவாரா? என முன்னாள் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.
    • இதற்கான அறிவிப்பை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும் என்றார்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. பிரமுகருமான டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    நாட்டின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்கி வருகிறது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தரமான மருத்துவ சிகிச்சையை குறைந்த செலவில் பெறபலரும் தமிழகத்திற்கு வருகிறார்கள்.

    நமது மாநிலம் சுகாதாரத் துறையில் முன்னணி மாநில மாக திகழ்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு பலரது பாராட்டையும் பெற்று தந்தார். தமிழக மக்களுக்கும் குறைந்த கட்ட ணத்தில் தரமான சிகிச்சை கிடைக்க அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

    ஆனால் தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் தங்கள் ஊதிய, பதவி உயர்வுக்காக தொடர்ந்து போராட வைக்கப்படுகிறார்கள். இது நியாயமா? தற்போதுள்ள 8, 15, 17, 20 ஆண்டுகள் முடித்து கொடுக்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வை 5, 9, 11, 12 ஆண்டு கள் முடிந்தவுடன் கொடுக்க வேண்டும் என்று கடந்த 2009-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் கருணா நிதி ஆட்சியின்போது அர சாணை பிறப்பிக்கப்பட்டது.

    மத்திய அரசு மருத்து வர்கள் 4, 9, 13, 20 ஆண்டுகள் கழித்து ஊதிய, பதவி உயர்வு பெறுகின்றனர். அவர்க ளுக்கு 7-வது ஊதிய குழுவில் 14-வது ஆண்டில் ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் அடிப்படை ஊதியமாக பெறுகிறார்கள். மத்தியஅரசு மருத்துவர் 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் குறைந்தது 15 அல்லது 20 ஆண்டுகள் கழித்து பெறுகின்ற நிலை உள்ளது. இதன் காரணமாக மாநில அரசு மருத்துவர் ரூ.86 ஆயிரம் மட்டுமே அடிப்படை ஊதியமாக பெறுகிறார்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது இதுதொடர்பாக சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர், எனது கோரிக்கைக்கு ஆவண செய்யப்படும் என பதில் அளித்தார். ஆனால் கொரோனா காரணமாக காலதாமதமானது. கடந்த 2009-ம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னையில் மருத்துவர்கள் உண்ணா விரத போராட்டம் நடத்தி னர்.

    அப்போது மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சி அமைந்தவு டன் கோரிக்கை நிறைவேற் றப்படும் என உறுதி அளித்தார். தி.மு.க. ஆட்சி அமைத்து 1½ வருடம் ஆகியும் மருத்துவர்களின் நியாயமான ஊதிய, பதவி உயர்வு நிறைவேற்றப்படவில்லை. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முன்வர வேண்டும். இதற்கான அறிவிப்பை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×