என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுரையில் தேசியக்கொடி விற்பனை அமோகம்
- மதுரையில் தேசியக்கொடி விற்பனையாகி வருகிறது.
- பேன்சி ஸ்டோர் மளிகை கடை மற்றும் வணிக அங்காடிகளில் தேசியக்கொடி வாங்க கூட்டம் அலை மோதுகிறது.
மதுரை
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பிரதமர் மோடி பேசுகையில், வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசியக்கொடியேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேசிய க்கொடி விற்பனை அதிகரித்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள பேன்சி ஸ்டோர், மளிகை கடைகள், டிபா ர்ட்மென்டல் ஸ்டோர் மற்றும் பொது இடங்களில் தேசியக்கொடி விற்பனை நடந்து வருகிறது. மதுரையில் 50-க்கும் மேற்பட்ட ஆப்செட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தேசிய கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தையல் கடைகளிலும் தேசியக்கொடி தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்து உள்ளது.
மதுரை கீழஆவணி மூல வீதியில் உள்ள அலங்கார பொருட்கள் விற்பனை கடை உரிமையாளர்கள் கூறுகையில், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின நாட்களில் தேசிய கொடி விற்பனை அதிகமாக இருக்கும். அரசு நிகழ்ச்சி உள்ளிட்ட தினங்களில் தேசியக்கொடி விற்பனை ஓரளவு இருக்கும். பிரதமர் மோடி தற்போது வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
சிவகாசி, திருப்பூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து தேசியக்கொடிக்கு கூடுதலாக ஆர்டர் கொடுத்துள்ளோம். 8 செமீ. உயரம்-12 செ.மீ. நீளம் முதல், 48-க்கு 72 செ.மீ. வரை பல்வேறு அளவுகளில் காட்டன் தேசியக்கொடி உள்ளது. இவற்றை ரூ.30 முதல் ரூ.350 வரை விற்பனை செய்கிறோம்.
பாலியஸ்டர் கொடி 18க்கு 27 செ.மீ-ரூ.95, 24க்கு 36 செ.மீ- ரூ.140க்கு விற்கப்படுகிறது. சட்டை பாக்கெட்டில் ஒட்டும் ஸ்டிக்கர் கொடி 120 எண்ணம்-ரூ.100, சாதாரண பாக்கெட் கொடிகள் 5000 எண்ணம்-ரூ.500க்கு விற்கிறோம்.
வாகனங்களின் முன்புறம் பறக்கவிடும் கொடி, விசிறி, தொப்பி என்று பல்வேறு வகைகளில் தேசிய கொடிகள் உள்ளன. வீடுகளில் ஏற்ற 8-க்கு 12 செ.மீ., அல்லது 14க்கு 21 செ.மீ., அளவுள்ள தேசிய கொடி பொருத்தமாக இருக்கும் என்றனர்.
மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற ஆர்வமாக உள்ளதால், பேன்சி ஸ்டோர் மளிகை கடை மற்றும் வணிக அங்காடிகளில் தேசியக்கொடி வாங்க கூட்டம் அலை மோதுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்