search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 தேர்வை ஆர்வத்துடன் எழுதிய மாணவ-மாணவிகள்
    X

    பிளஸ்-2 தேர்வை ஆர்வத்துடன் எழுதிய மாணவ-மாணவிகள்

    • பிளஸ்-2 தேர்வை ஆர்வத்துடன் எழுதிய மாணவ-மாணவிகளை பறக்கும் படையினர் கண்காணித்தனர்.
    • காலை 10 மணிக்கு தமிழ் மொழி பாட தேர்வு தொடங்கியது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு தொடங்கி யது. இந்த தேர்வை 8.75 லட்சம் மாணவ-மாணவி கள் எழுதினர்.

    மதுரை மாவட்டத்தில் 18, 734 பேர் மாணவர்களும், 18,723 மாணவிகளும் என மொத்தம் 37,457 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

    119 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடந்தது. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதி னர். காலை 10 மணிக்கு தமிழ் மொழி பாட தேர்வு தொடங்கியது.

    தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்தி ருந்தனர். அவர்கள் புத்தகங்களுடன் கடைசி நேர தயாரிப்பில் மும்முர மாக ஈடுபட்டு இருப்பதை காண முடிந்தது. மாணவ-மாணவிகளுக்கு ஆசிரி யர்களும் தேர்வு குறித்து அறிவுரைகளை வழங்கினர்.

    தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் கொண்டு செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்க ப்பட்டிருந்தது. எனவே மாணவ-மாணவிகள் தீவிர சோதனைக்குட்படுத்த ப்பட்ட பின்னர் 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஹால்டிக்கெட் சரி பார்க்கப்பட்டது.

    தேர்வு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய-ஆசிரியைகள் ஈடுபடுத்தப்பட்டனர். தலைமை ஆசிரியர்கள், உயர் கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டது. அவர்கள் தேர்வு மையங்க ளுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    முன்னதாக தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அதிகாரி நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

    இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,920 மாணவர்கள், 8,147 மாணவிகள் என மொத்தம் 16,067 பேர் இன்று தேர்வு எழுதினர். 65 மையங்களில் தேர்வு நடந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 7,625 மாணவர்கள், 8,808 மாணவிகள என மொத்தம் 16 ஆயிரத்து 433 மாணவ மாணவிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

    விருதுநகர் மாவட்டத்தில் 10,985 மாணவர்கள், 12,383 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 368 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

    ஒவ்வொரு ஆண்டும் விருதுநகர் மாவட்டம், மாநில அளவில் பிளஸ்-2 தேர்வு சதவீதத்தில் முதலிடம் பெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதனை தக்க வைக்க மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயார்படுத்தினர்.

    3 மாவட்டங்களிலும் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தி னர்.

    தமிழ் மொழி பாட ேதர்வுடன் இன்று தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×