search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக கவர்னரின் சனாதன பஜனை திராவிட மண்ணில் எடுபடாது
    X

    தமிழக கவர்னரின் சனாதன பஜனை திராவிட மண்ணில் எடுபடாது

    • தமிழக கவர்னரின் சனாதன பஜனை திராவிட மண்ணில் எடுபடாது என்று பசும்பொன் பாண்டியன் கூறி உள்ளார்.
    • ஆளுநர் ரவியை, குடியரசுத்தலைவர் தமிழக மக்களின் நலன் கருதி திரும்பப்பெற வேண்டும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தமிழகத்தின் அமைதியை யும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையில் வருகிற 6-ந்தேதி நடை பெறும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு முழுமையாக தடை விதிக்க தமிழக அரசு சட்டப்படியான நடவ டிக்களை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தினமும் ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தியல் அடிப்படையில் வர லாற்றை திணிக்கும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்புச் செயலாளராக தன்னுடைய கடமையை செய்து வருகிறார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பிரசாரக்காரராக செயல்படலாம்.

    மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தின் பெயரால் பொறுப்பேற்றுள்ள ஒருவர், அரசியல் சாச னத்தின் சாரத்திற்கு ஏதிராக பேசுவதும், செயல்படு வதும், இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும். கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாளையொட்டி நாகர்கோவிலில் கவர்னர் பேசியது வரலாற்று திரிப்பு வேலையாகும்.

    இன்றைய குமரி மாவட்டத்தை உள்ளடக்கிய அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சி ஆளுநர் கூறுவதற்கு நேர் எதிர்மாறான வரலாறாக தான் உள்ளது. பெண்கள் மேலாடை அணிவது கூட தடுக்கப்பட்டது. அதை எதிர்த்து தோள் சேலை போராட்டம் நடைபெற்று 200ஆண்டுகள் ஆகிறது.

    இது குறித்து ஆளுநர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அன்று எல்லாம் உன்னதமாக இருந்தது என்றும், மேற்கத்தியர்கள் தான் தவறான கதையை கட்டி விட்டார்கள் என்றும் பழமைக்கு பட்டுத்துணி போர்த்துகிறார் ஆர்.என்.ரவி. தீண்டாமை கொடுமை, பாராமை என்ற கொடுமையும் இருந்தது.

    இதனால் தான் அந்த மண்ணில் அய்யங்காளை, நாராயண குரு, வைகுண்ட சாமிகள் போன்ற சமூக சீர்திருத்த தலைவர்கள் உருவாகி கேரளத்தில் பெரும் இயக்கங்களை முன்னெடுத்தார்கள். தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.

    இதையெல்லாம் மறைத்து ஒரு புல்லைக்கூட கிள்ளிப்போடாத சனாதன கூட்டத்தில் வளர்ந்த ஆர்.என்.ரவி நடத்தும் சனாதன பஜனை திராவிட மண்ணில் எடுபடாது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியை, குடியரசுத்தலைவர் தமிழக மக்களின் நலன் கருதி திரும்பப்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×