என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதியவர் திடீர் மாயம்
- முதியவர் திடீரென மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முத்துக்கூறு நாகராஜ்(வயது60) என்பவர் தனது உறவினர்களுடன் சாமி கும்பிட வந்தார். அப்போது நாகராஜ் கோவிலுக்குள் செல்லாமல் வடக்கு சித்திரை வீதியில் உள்ள காலணிகள் பாதுகாப்பு அறை அருகில் காத்திருப்பதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து சாமி கும்பிட சென்ற உறவினர்கள் திரும்பி வந்து பார்த்தபோது நாகராஜ் மாயமாகி இருந்தார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மீனாட்சி அம்மன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
Next Story






