என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்](https://media.maalaimalar.com/h-upload/2022/10/30/1783910-untitled-1.jpg)
வேல்வாங்குதல் நிகழ்ச்சியில் சத்யகிரீஸ்வரர், கோவர்த்தன அம்பிகையுடன், முருகப்பெருமான் அருள் பாலித்த காட்சி.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது.
- நாளை காலை தேரோட்டமும், மாலையில் பாவாடை தரிசனமும் நடை பெறும்.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமாள் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை யிலும், மாலையிலும் சண்முகா அர்ச்சனை நடைபெற்று வருகிறது.
கந்த சஷ்டி விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. முருகப்பெருமான் சத்யகிரீஸ்வரர் முன்னி லையில் சூரனை அழிக்க கோவர்த்தன அம்பிகையிடம் நவரத்தினங்கள் பதித்த வேலை பெற்றார்.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 6 மணி அளவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு நடைபெற உள்ளது. விழாவையொட்டி முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் மீது அமர்ந்து ரத வீதிகள் சுற்றி வந்து சொக்கநாதர் கோவில் முன்பு வீரபாகு தேவருடன் எழுந்தருளுவார்.
அங்கு சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்கார லீலை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை காலை தேரோட்டமும், மாலையில் பாவாடை தரிசனமும் நடை பெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.