என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விநாயகர்-பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
- மதுரை மாவட்டம் குட்லாடம்பட்டியில் விநாயகர்-பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இரவு நேரங்களில் பெண்கள் முளைப்பாளிகை, பக்தி பாடல் ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சி, பக்தி பட்டிமன்றம் நடந்தது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குட்லாடம்பட்டி மந்தைபகுதியில் விநாயகர், பெருமாள், முத்தாலம்மன், காளியம்மன், கருப்புசாமி ஆகிய தெய்வங்களுக்கு கோவில்கள் கட்டப்பட்டு கிராம பொதுமக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கோவில்களின் கும்பாபிஷேகவிழா நடந்தது.
முதல்நாள் விக்னேஷ்வர பூஜை, 2,3-ம் நாளில் யாகசாலை பூஜையும் நடந்தது. ேநற்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோவில் கோபுரங்களில் ராமேசுவரம், அழகர்கோவில், பாபநாசம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டன.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார், கல்யாண சுந்தரகுருக்கள் ஆகியோர் தலைமையில் குழுவினர் செய்தனர். இரவு நேரங்களில் பெண்கள் முளைப்பாளிகை, பக்தி பாடல் ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சி, பக்தி பட்டிமன்றம் நடந்தது. இதன்ஏற்பாடுகளை குட்லாடம்பட்டி கிராமபொதுமக்கள் செய்திருந்தனர்.