search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணாவின் பெயரை சூட்ட மு.க.ஸ்டாலின் மறந்தது ஏன்? ஆர்.பி.உதயகுமார்
    X

    அண்ணாவின் பெயரை சூட்ட மு.க.ஸ்டாலின் மறந்தது ஏன்? ஆர்.பி.உதயகுமார்

    • மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு அண்ணாவின் பெயரை சூட்ட மு.க.ஸ்டாலின் மறந்தது ஏன்? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
    • இந்த உரிமைத் தொகை திட்டத்தில் 56.50 லட்சம் மனுக்களை நிராகரித்துவிட்டனர்.

    மதுரை

    பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டியில் உள்ள அண்ணாவின் திருஉ ருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    மாநிலங்களில் மாநில கட்சி ஆள முடியும் என்ற வரலாற்றை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா ஆவார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என தாரக மந்திரத்தை உருவாக்கினார். ஓலை குடிசையில் வசிக்கும் குரல், கோட்டை கொத்த ளத்தில் ஒலிக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். அதிகாரப் பகிர்வு கடைக் கோடியிலும் இருக்க வேண்டும் என ஜனநாய கத்தை உருவாக்கினார் பேர றிஞர் அண்ணா.

    அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்திற்கு கருணா நிதி பெயரை சூட்டியுள்ளார். அண்ணா பெயரை சூட்ட மறந்தது ஏன்? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் கருணாநிதி பெயர் மறந்து விட்டது அதை ஞாபகப்படுத் தும் வகையில் இது போன்ற பெயர் சூட்டும் விழாவை முதலமைச்சர் நடத்துகிறார்.

    தமிழகத்தில் 2 கோடியே 18 லட்சம் குடும்பங்கள் உள்ளது. ஆனால் இந்த உரி மைத் தொகை திட்டத்தில் 56.50 லட்சம் மனுக்களை நிராகரித்துவிட்டனர். இதனால் இந்த திட்டத்தில் நிறைய குளறுபடி ஏற்பட் டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×