search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேட்பாளர்கள் வாபஸ் பெற்றது ஏன்?
    X

    ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வசந்தகுமாரிக்கு

    தேர்தல் அதிகாரி சரவணன், உதவி தேர்தல் நடத்தும் இளங்கோ ஆகியோர் வெற்றி சான்றிதழை வழங்கியபோது எடுத்த படம்.

    வேட்பாளர்கள் வாபஸ் பெற்றது ஏன்?

    • வேட்பாளர்கள் வாபஸ் பெற்றது ஏன்? என்று தி.மு.க. மாவட்ட செயலாளர் மணிமாறன் கூறினார்.
    • மற்ற கட்சி வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் தி.மு.க. வேட்பாளர் வசந்தகுமாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டு செங்கப்படை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் விலகிக் கொண்டார். இதேபோல் மற்ற கட்சி வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் தி.மு.க. வேட்பாளர் வசந்தகுமாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    அவருக்கு தேர்தல் அதிகாரி சரவணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோ ஆகியோர் வெற்றி சான்றிதழை வழங்கினார். வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர் வசந்தகுமாரிக்கு, தி.மு.க மாவட்ட செயலாளர் மணிமாறன் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்பு, மக்களுக்கு ஆற்றி வருகின்ற பணிகள், அவர் தலைமையில் நல்லாட்சி தொடர்வதால் எதிர்க்கட்சிகள் போட்டியிட்டால் தோல்வி அைடந்து விடுவோம் என்ற பயத்தில் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். செங்கப்படை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதன்குமார், பாசபிரபு, முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், நகரமன்றத் துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்கபாண்டி, புவனேஸ்வரி ராஜசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலம்பட்டி சண்முகம், ஆதிமூலம், முன்னாள் யூனியன் தலைவர் கொடி சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×