என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மலேசியா சிறையில் உள்ள 4 பேரை பத்திரமாக மீட்டு கொண்டுவர வேண்டும்; குடும்பத்தினர் மனு மலேசியா சிறையில் உள்ள 4 பேரை பத்திரமாக மீட்டு கொண்டுவர வேண்டும்; குடும்பத்தினர் மனு](https://media.maalaimalar.com/h-upload/2023/01/23/1825626-13.webp)
கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த கீழகோவில்பத்து பகுதி மக்கள்.
மலேசியா சிறையில் உள்ள 4 பேரை பத்திரமாக மீட்டு கொண்டுவர வேண்டும்; குடும்பத்தினர் மனு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- எங்களை போலீசார் பிடித்து வைத்து ஜெயிலில் அடைத்து வைத்துள்ளனர்.
- வயிற்று பிழைப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பாபநாசம் தாலுகா கீழ கோவில் பத்து உடையார் கோயிலை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தை சேர்ந்த யுவராஜ், ராமு, சிகாமணி, மணிமாறன் ஆகிய 4 பேர் தோட்ட வேலைக்காக மலேசியா நாட்டிற்கு செல்ல முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் தாய்லாந்து சென்றனர். அங்கிருந்து மலேசியா செல்ல இருப்பதாக அவர்களின் குடும்பத்தினரிடம் கூறினர்.
ஆனால் அதன் பிறகு ஒரு எண்ணில் இருந்து எங்களுக்கு ஒரு குரல் செய்தி வந்தது.
அதில் இது போலீஸ்காரர் தொலைபேசி என்றும், எங்களை போலீசார் பிடித்து வைத்து ஜெயிலில் அடைத்து வைத்துள்ளனர் எனவும் கூறி துண்டிக்கப்பட்டது.
அதன் பிறகு எந்த ஒரு தகவலும் இல்லை.
இதனால் மன வேதனை அடைந்த அந்த நான்கு பேரின் குடும்பத்தினரும் திரும்பவும் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா ? இல்லையா ? என்ற எந்த தகவலும் எங்களுக்கு தெரியவில்லை.
எனவே மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்ற 4 பேரையும் பத்திரமாக மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.