என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா; 2, 3-ந் தேதிகளில் நடைபெறுகிறது தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா; 2, 3-ந் தேதிகளில் நடைபெறுகிறது](https://media.maalaimalar.com/h-upload/2022/10/30/1784125-16.jpg)
தஞ்சை பெரிய கோவிலில் சதயவிழா குழு தலைவர் து.செல்வம் பேட்டியளித்தார்.
தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா; 2, 3-ந் தேதிகளில் நடைபெறுகிறது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 3-ந் தேதி காலை 7 மணிக்கு கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல்.
- காலை 8.30 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் சதயவிழா குழு தலைவர் து.செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
மாமன்னன் ராஜராஜசோழன் முடிசூட்டிய நாள் அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜசோழனின் 1037 ஆவது சதய விழா மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் வருகிற 2-ந் தேதி காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.
தொடர்ந்து, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளு வன் தொடங்கிவைக்கும் மாமன்னன் ராஜராஜ சோழன் தொடர்பான கருத்தரங்கம் நடைபெறுகிறது.பின்னர், மாலையில் திருமுறைப் பண்ணிசை,
பரதம், நாதசங்கமம், வயலின் இன்னிசை, கவியரங்கம் உள்ளிட்டநிகழ்ச்சிகள்நடைபெறவுள்ளன.
இரவு 8.30மணியளவில் நகைச்சுவை சிந்தனைப்பாட்டுபட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.
சதய விழா நாளான 3-ந் தேதி காலை 7 மணிக்கு கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல், 7.30 மணிக்குமாமன்னன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறைத் திருவீதி உலா,காலை 8.30 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷே கம், பெருந்தீப வழிபாடு நடைபெறுகிறது.
மாலையில் குரலிசை, திருமுறைப் பண்ணிசை அரங்கம், திருநெறி தமிழிசை நடைபெறவுள்ளன.
இரவு 7 மணியளவில் நடைபெறும் நிறைவு விழாவில் தஞ்சாவூர் பெரிய கோயில் அகத்திய சன்மார்க்க சங்கச் செயலர்
சிவ. அமிர்தலிங்கம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஓய்வு பெற்ற முதல்வர் பி.ஜி. சங்கரநாராயணன், சைவ சித்தாந்தப் பேராசிரியர் வீ. ஜெயபால் ஆகியோருக்கு மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கப்படவுள்ளது.
இதையடுத்து, இரவு 8 மணிக்கு தேன்மொழி ராஜேந்திரனின் நையாண்டி மேள நிகழ்ச்சி, ஆந்திரப் பிரதேச கல்பனா குழுவினரின் குச்சிப்புடி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அரண்மனைதேவஸ்தான பரம்பரைஅறங்கா வலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே,
உதவி ஆணையர் கவிதா, சதய விழாக் குழுத் துணைத் தலைவர் மேத்தா, முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், ஆடிட்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.