என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு மகளிர் கல்லூரியில் கோவில் கட்ட நிர்வாகம் எதிர்ப்பு
- இந்த கோவிலில் கூடுதலாக கட்டிடம் கட்ட வழிபாடு நடத்தும் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கினர்.
- கல்லூரி நிர்வாகம் சார்பில், கோவில் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது கல்லூரியில் கலந்தாய்வு, சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த கல்லூரி வளாகத்தில் பூக்கார தெருவில் உள்ள பொதுமக்கள் வழிபாடு நடத்தும் செங்கமலை நாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் இந்த கோவிலில் கூடுதலாக கட்டிடம் கட்ட வழிபாடு நடத்தும் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கினர். ஆனால் இதற்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இன்று பணியை தொடங்குவதற்காக மக்கள் சிலர் வந்தனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. தகவல் அறிந்த நகர துணை போலீஸ் ராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில், கோவில் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் தற்போது கல்லூரியில் கலந்தாய்வு நடந்து வருகிறது. இதனால் தற்போது கோவில் கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு பூக்கார வழிபாடு நடத்தும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் இரு தரப்பினிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில் கலந்தாய்வு முடியும் வரை கோவில் கட்டுமான பணியை தொடங்கக்கூடாது என பேசி முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை பார்க்கலாம் என கூறினர். இதனால் கட்டுமான பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.