search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் பஸ் நிலையத்தில் தியாகி கே.டி.கோசல்ராம் பெயரை உலோக எழுத்துகளாக மாற்ற வேண்டும் - ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை
    X

    சாத்தான்குளம் பஸ் நிலையத்தில் தியாகி கே.டி.கோசல்ராம் பெயரை உலோக எழுத்துகளாக மாற்ற வேண்டும் - ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை

    • இந்திய சுதந்திர போராட்டத்தில் 32 தியாகிகளை வழங்கிய பெருமை கொண்டது ஆறுமுகநேரி பகுதி.
    • இவரது பெருமையை போற்றும் வகையில் சாத்தான்குளம் பஸ் நிலையத்திற்கு தியாகி கே.டி.கோசல்ராம் என்று பெயர் சூட்டப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜா மணி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய சுதந்திர போராட்டத்தில் 32 தியாகிகளை வழங்கிய பெருமை கொண்டது ஆறுமுகநேரி பகுதி. இவர்களில் முக்கியமான தியாகி கே.டி. கோசல்ராம் பின்னாளில் சாத்தான்குளம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 2 முறையும், பின்னர் திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் 9 வருடங்களாக எம்.பி. ஆகவும் இருந்து வந்துள்ளார். அவரது வாழ்நாள் சாதனைகளில் மணிமுத்தாறு அணை திட்டம் மணி மகுடமாக விளங்குகிறது.

    இவரது பெருமையை போற்றும் வகையில் சாத்தான்குளம் பஸ் நிலையத்திற்கு தியாகி கே.டி.கோசல்ராம் என்று பெயர் சூட்டப்பட்டது. பெயிண்டால் எழுதப்பட்ட அந்தப் பெயர் தற்போது அழிந்த நிலையில் உள்ளது. இதனை உலோக எழுத்துக்களால் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×