search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல்பட்டில் தாய் சேய் நல மையம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    செங்கல்பட்டில் தாய் சேய் நல மையம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் சுமார் 37,000 கர்ப்பிணி தாய்மார்கள் தங்கள் கர்ப்பத்தை பதிவு செய்கின்றனர்.
    • அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து அவர்களை தொடர்ந்து கிராம சுகாதார நர்சுகள் கண்காணித்து வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகராட்சி, யானைக்கால் நோய் தடுப்பு ஆஸ்பத்திரியில் உள்ள துணை சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் கர்ப்பிணி தாய்மார்களை தொடர்ந்து கண்காணிப்பதற்காக 24 மணி நேர தாய் சேய் நல கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் போசும்போது, 'செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் சுமார் 37,000 கர்ப்பிணி தாய்மார்கள் தங்கள் கர்ப்பத்தை பதிவு செய்கின்றனர். இவர்களில் சுமார் 13,000 கர்ப்பிணி தாய்மார்கள் சிக்கலுள்ள கர்ப்பிணிகள் என்று கண்டறியப்பட்டுள்ளனர். கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த சோகை, தைராய்டு போன்ற அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து அவர்களை தொடர்ந்து கிராம சுகாதார நர்சுகள் கண்காணித்து வருகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த சிக்கலுள்ள கர்ப்பிணி தாய்மார்களை தொடர்ந்து கண்காணிப்பதற்காக துணை இயக்குநர் அலுவலகத்தில் 24 மணி நேர தாய் சேய் நல கட்டுப்பாட்டு மையம் இயங்கும் எனவும் இந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து தினமும் சிக்கலுள்ள கர்ப்பிணிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் சிகிச்சைக்கு சென்றனரா? தேவைப்படும் பரிசோதனைகள் மேற்கொண்டனரா? என்பதை கண்காணிப்பதோடு அவர்களை தொடர் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளின் அவசியம் பற்றிய அறிவுரைகள் வழங்கப்படும்.

    மேலும், சந்தேகங்கள் இருப்பின் இந்த 24 மணி நேர தாய் சேய் நலக் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 7339697545 மற்றும் 7200210545-களில் தொடர்பு கொள்ளலாம்' என தெரிவித்தார்.

    Next Story
    ×