search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்திஜி வணிக வளாக கட்டுமான பணிகளை மேயர் ஆய்வு
    X

    காந்திஜி வணிகவளாக கட்டுமான பணிகள் குறித்து மேயர் சண்.ராமநாதன் கேட்டறிந்தார்.

    காந்திஜி வணிக வளாக கட்டுமான பணிகளை மேயர் ஆய்வு

    • அடித்தளம், தரைத்தளம், முதல் தளம் என மூன்று பிரிவுகள் உள்ளது.
    • 4 சக்கர வாகனங்கள் 30 எண்ணிக்கையில் நிறுத்தும் அளவுக்கு இட வசதி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி மதிப்பில் காந்திஜி வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று வணிக வளாக கட்டுமான பணிகளை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பணிகள் முடிந்த விவரங்களை கேட்டு அறிந்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காந்திஜி வணிக வளாகம் மேம்படுத்துதல் கட்டுமான பணி பெருமளவில் முடிந்து விட்டது. விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.இதில் அடித்தளம், தரைத்தளம், முதல் தளம் என மூன்று பிரிவுகள் உள்ளது.

    மொத்த பரப்பளவு 51992 சதுர அடி ஆகும். அடித்தளத்தில் 4 சக்கர வாகனங்கள் 30 எண்ணிக்கையில் நிறுத்தும் அளவுக்கு இட வசதி உள்ளது.

    தரை மற்றும் முதல் தளங்களில் கடைகள் வரவுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட விரைவிலே இந்த கட்டுமான பணிகள் முடிந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, கவுன்சிலர் மேத்தா, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×