என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் ம.தி.மு.க. சார்பில் கொடியேற்று விழா
    X

    ஓசூரில் ம.தி.மு.க. சார்பில் கொடியேற்று விழா

    • 30-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.
    • மாவட்ட செயலாளர் வி.ஏ.பாலமுரளி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கட்சிக்கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    ஓசூர்,

    ஓசூரில் ம.தி.மு.கவின் 30-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.

    ஓசூர்-பாகலூர் சாலையில் கே.சி.சி, நகர் சந்திப்பில் நடந்த விழாவிற்கு, ஓசூர் நகர பொறுப்பாளர் ஈழம் குமரேசன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் வி.ஏ.பாலமுரளி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கட்சிக்கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இதில், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். முன்னதாக, ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    Next Story
    ×