search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாநகராட்சியில்மேம்பாலங்களில் சுவரொட்டி ஒட்டுவதை தடுக்க நடவடிக்கை
    X

    கோவை மாநகராட்சியில்மேம்பாலங்களில் சுவரொட்டி ஒட்டுவதை தடுக்க நடவடிக்கை

    • வண்ண ஓவியங்கள் வரையும் பணி தொடக்கம்
    • கோவை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக காட்சியளிக்கும்.

    கோவை:

    குப்பையை தரம் பிரித்து கொடுக்க வேண்டியதை மக்கள் மத்தியில் பதிய வைப்பத ற்காகவும், காந்திபுரம் மேம்பாலத்தின் தூண்களில் சுவரொட்டி ஒட்டுவதை தடுக்கும் முயற்சியாகவும் விழிப்புணர்வு ஓவியம் வரையும் திட்டத்தை, கோவை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது.

    காந்திபுரம் கிராஸ்கட் ரோடு சந்திப்பில் உள்ள தூண் ஒன்றில், ஓவியம் வரையும் நிகழ்ச்சியை மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த பாலத்தில் ஒரே ஒரு தூணில் மட்டும் ஓவியம் வரைவதற்கு மாநகராட்சிக்கு, மாநில நெடுஞ்சாலை த்துறை அனுமதி அளித்துள்ளது. பாலம் தொடங்கும் இடத்தில் இருந்து நிறைவடையும் இடம் வரை அனைத்து தூண்களிலும் சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது.

    இதனால் தூண்கள் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.திருச்சி ரோடு மேம் பாலத்தின் தூண்களில், தேசிய நெடுஞ்சாலைத் துறையினரே ஓவியங்கள் வரைய முடிவு செய்துள்ளனர்.

    இதேபோல, காந்திபுரம் பாலம் உட்பட அனைத்துப் பாலங்களிலும் உள்ள சுவரொட்டிகளை அகற்றி, ஓவியங்கள் வரையும் பொறுப்பை, மாநகராட்சி அல்லது தன்னார்வ அமைப்பகளிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது கோவை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக காட்சியளிக்கும்.

    Next Story
    ×