search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை செவித்திறன் குறையுடையார் பள்ளியில் மருத்துவ முகாம்
    X

    முகாமை துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    தஞ்சை செவித்திறன் குறையுடையார் பள்ளியில் மருத்துவ முகாம்

    • மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
    • இலவச பாஸ் கிடைப்பதற்காக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இன்று தஞ்சை மேம்பாலம் அரசு செவித்திறன் குறையுடையார் பள்ளியில் மத்திய மாவட்ட தி.மு.க மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதற்கு மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் டாக்டர் மோகன்ராஜ், மாவட்ட அமைப்பாளர் டாக்டர் வசந்தகுமார், மாவட்டத் தலைவர் டாக்டர் ராஜ் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த மருத்துவ முகாமை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் செவித்திறன் குறையுடைய மாணவ -மாணவிகளுக்கு பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து செவித்திறன் குறையுடைய மாணவ- மாணவிகள் பஸ், ரயில்களில் இலவசமாக பயணம் செய்வதற்கும், டோல்கேட்டில் செல்லும் போது உடன் செல்பவர்களுக்கு இலவச கட்டணம் ஆகியவற்றிற்கான இலவச பாஸ் கிடைப்பதற்காக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகர செயலாளரும் மேயருமான சண் ராமநாதன், அவைத்தலைவர் இறைவன், செயற்குழு உறுப்பினர் செல்வம், பகுதி செயலாளர்கள் நீலகண்டன், சதாசிவம், கார்த்தி, ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, நிர்வாகி தர்மராஜ், மருத்துவர் அணி நிர்வாகிகள் டாக்டர்கள் சதீஷ், சுரேஷ், ராஜா, விக்னேஷ், பாஷா, ராஜராஜன், காயத்ரி, பிரகாஷ், புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×