search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலுார் சக்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
    X

    தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள்.

    மேலுார் சக்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

    • துக்கியாம்பாளையம் ஊராட்சி மேலுார் சக்தி மாரியம்மன் கோவிலில் 9 ஆண்டுக்கு பின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
    • இன்று மஞ்சள் நீராட்டு விழாவும் சத்தாபரண நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் ஊராட்சி மேலுார் சக்தி மாரியம்மன் கோவிலில் 9 ஆண்டுக்கு பின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்கள் கருப்பனார், மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து காவல் தெய்வங்களுக்கும் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை வழிபாடு செய்தனர்.

    தொடர்ந்து பிரமாண்டமான மரத்தேர் கலைநயமிக்க வண்ண சேலைகளால் அலங்கரிக்கப்பட்டு ராஜவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. துக்கியாம்பாளையம், மேலுார், மாரியம்மன் புதுர், மன்னாயக்கன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நுாற்றுக்கணக்கான பக்தர்கள், வேண்டுதல் நிறைவேற்றிய அம்மனுக்கு, உடலில் அலகு குத்தியும், பூங்கரகம், அக்னிகரகம் எடுத்தும், உருளதண்டம் போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவும் சத்தாபரண நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள்.

    Next Story
    ×