search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி பஸ் நிலையத்தில் இன்றுமுதல் மினிபஸ்கள் புறப்பட்டு செல்ல அனுமதி - பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேயர் நடவடிக்கை
    X

    மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமியுடன் மினி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    தூத்துக்குடி பஸ் நிலையத்தில் இன்றுமுதல் மினிபஸ்கள் புறப்பட்டு செல்ல அனுமதி - பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேயர் நடவடிக்கை

    • மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி மினி பஸ் உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • பின்னர் சில நிபந்தனைங்களுடன் மினி பஸ்கள் இன்று முதல் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தின் உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி யில் சமீபத்தில் திறப்பு விழா கண்ட அண்ணா (பழைய) பஸ் நிலையத்தில், மினி பஸ்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக வாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    பேச்சுவார்த்தை

    இதைத்தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி மினி பஸ் உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது அவர்களி டம் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பஸ் நிலையத்தின் உள்ளே வந்து செல்வதற்கு அதிகாரிகளுடன் கலந்தா லோசித்து வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதாக உறுதி யளித்தார்.பின்னர் சில நிபந்தனங்க ளுடன் மினி பஸ்கள் இன்று முதல் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தின் உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மினி பஸ்கள் பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. இதனை மேயர் ஜெகன் பெரியசாமி இன்று காலை நேரில் சென்று பார்வை யிட்டார்.

    நிகழ்ச்சியின் போது தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செய லாளரும், மாமன்ற உறுப்பி னருமான சுரேஷ் குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பி னர்கள் ஜான் சீனிவாசன், சரவணகுமார், பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் மச்சாது மற்றும் மாநகராட்சி துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×