search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையால் சேதமடைந்த சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
    X

    மழையால் சேதமடைந்த சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

    • ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது.
    • கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் பாடந்தொரை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவை பார்வையிட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலைகள் மற்றும் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

    இதேபோன்று கூடலூர் 27-வது மைல் சனீஸ்வரன் கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து நடுகூடலூர் வரை நிலத்தில் விரிசல்கள் உண்டாகி பொதுமக்களின் வீடுகளும் பலத்த சேதம் அடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வசிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று கூடலூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் பாடந்தொரை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவை பார்வையிட்டார்.

    அப்போது, வரும் காலங்களில் மண் சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்பு கற்களுடன் கூடிய கம்பிவலை பொருத்த உத்தரவிட்டார். தொடர்ந்து 27-வது மைல் பகுதியில் விரிசல் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உரிய நடவடிக்கை அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து குறைகளை தெரிவித்தனர்.

    அத்றகு, உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். ஆய்வின்போது வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், கலெக்டர் அம்ரித், தலைமை பொறியாளர்கள் பாலமுருகன், சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர்கள் சரவணன், கண்ணன், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வம், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் குழந்தை ராஜ் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×