search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் 535 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்- அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
    X

    தூத்துக்குடியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கிய போது எடுத்த படம்.

    தூத்துக்குடியில் 535 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்- அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

    • விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, 535 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, 535 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    தன்னம்பிக்கை

    அப்போது, தமிழக முதல்-அமைச்சர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். பெண்கள் நல்ல, தரமான உயர்கல்வி பெற வேண்டும், பாலின சமத்துவம் இருக்க வேண்டும் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நல்ல வேலைவாய்ப்பு, தொழில் தொடங்கும் வகையில் திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

    மாணவிகள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். மதிப்பெண் முக்கியமல்ல. ஒவ்வொருவரும், அவர்கள் திறமைக்கு ஏற்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். பெற்றோருக்கு கீழ்படிந்து இருக்க வேண்டும். நன்றாக படியுங்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமையட்டும் என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பிரேம்குமார் ராஜாசிங், கவுன்சிலர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர் கீதா செல்வமாரியப்பன் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×