search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாநகராட்சியில்  வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு,  எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு
    X

    கடலூரில் அமைச்சர்கள் கே. என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் புதிதாக கட்டி வரும் நூலக கட்டிடத்தை நேரில் சென்று ஆய்வு செய்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாக துறை ஷிவ்தாஸ் மீனா விடம் கேட்டறிந்தனர். அருகில் கலெக்டர் பாலசுப்ரமணியம், அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா உள்ளனர்.

    கடலூர் மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

    • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.
    • மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கலெக்டர் பாலசுப்ரமணியம், எம்.எல்.ஏ க்கள் அய்யப்பன், சபா. ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர் இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சியில் கறையேறவிட்டகுப்பத்தில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் திட்டம், வண்டிப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் பகுதியில் குளங்கள் அமைத்தல், கடற்கரை சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கும் பணிக்கான கட்டிடம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அரசு நிர்ணயித்த காலத்திற்குள் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (நகராட்சி நிர்வாக துறை) ஷிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக துறை வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி,அய்யப்பன் எம்.எல். ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, மாநகராட்சி பொறியாளர் மகாதேவன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா செந்தில் முருகன், சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் ஹேமலதா சுந்தரமூர்த்தி, பார்வதி, சக்திவேல், சசிகலா ஜெயசீலன், சாய்துனிஷா சலீம், விஜயலட்சுமி செந்தில், சுபாஷினி ராஜா, சுதா அரங்கநாதன், ஆராமுது, கவிதா ரகு, பாலசுந்தர், செந்தில் குமாரி, மாநகர அவை தலைவர் பழனிவேல், துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பகுதி துணை செயலாளர்கள் கார் வெங்கடேசன், ஜெயசீலன், லெனின் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×